Friday, April 16, 2010

காதல் பூக்கள்

உன் அசைவுகளில்
மலரும்
கவிமலர்கள் 
பரப்புகிறது 
காதல் மணம்!

தனித்திரு

தவிர்த்தலின்
தகிப்படங்கி பின்
தனித்திருப்பதும்
இனித்தது!

Thursday, December 31, 2009

செல்கிறேன்


காதலற்ற வெளியில்
பயணிக்கிறேன்
கவிதை துணைகொண்டு ...
ஈர்ப்பற்ற இவ்விடத்திலும்
சகபயணிகள் ...
தூரத்து கிரகமாய்
கரும்புள்ளியாய் நீ ...
வெளியின் இருளுக்குள்
காணாமல் செல்கிறேன்

Wednesday, December 23, 2009

நீயில்லாத இரவு


தனிமை இரவுகளில்

இருமலின் நடுவில்

விழிக்கும்போது

உணர்கிறேன்

நீரில்லாததையும்...


நினைவுகளை

கட்டியணைத்து

மீண்டும் உறங்குகிறேன் !


பொய்களோடு...

காலையில் சூடான

பொய்யோடு எழுப்புவாய்
அன்றைய தினம் முழுதும்
எனக்கான பொய்கள்
நிறைய இருக்கும்
உன்னிடம் ...

கேட்கும்போதெல்லாம்
புன்னகையுடன்
மனப்பையில் இருந்து
பொய்களை எடுத்துத்தருவாய்!

சிலநேரம்
புன்னகையும் பொய்யாய் ...
பொய்களெல்லாம்
தீர்ந்தபின்
அடி ஆழத்தில்
தட்டுப்படும்
காதலையும்
பொய்யென்று
தந்துவிடாதே !

Friday, December 18, 2009

விலகிச் செல்லாதே


பல யுகங்களுக்குப் பிறகும்
ஜென்மம் ஜென்மமாய்
சேர்த்து வைத்த
காதலை இசைக்கிறேன்!

உனக்கான எனது இசை
உலகமெல்லாம் காதலை
நிரப்புகிறது!

நதிகள், கடல்கள்,
மலைகள்,வான் வெளிகள்,
முடிவாய் எல்லா
உலகங்களையும்
மூழ்கடித்து ...
...
...
ஒருநாள்
உன் இதயம் தொட்டுவிடும்!

Thursday, November 26, 2009

காதலருவி


அருவியாய் விழும்
காதலுக்கு அணை
போட முடியாது !
வேண்டுமானால்
நனைந்து கொள்
!