Thursday, September 17, 2009

என் கடலும் உன் காதலும்


கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் - உன்
காதலை நினைவுப்படுத்தியது!


அலைகள் கால் தொடுகின்றது -நீ
மனம் தொட்டாய்!


காற்று குளிராய் தழுவியது -நீ
காதலாய் தழுவினாய்!


அது சுனாமியால்தாக்கியது
நீ வார்த்தையால் !


உப்பாய்கரித்தது
என் கண்ணீரும்,
அந்த கடல் நீரும்!


வீடு சேரும் வரை
ஷுவுக்குள் மணலாய்
உறுத்திகொண்டிருந்தது ....

Thursday, September 10, 2009

நீ - நான் - நிலா



பௌர்ணமி பொழுதில்

மலை சுற்றும்

பாதையில் ,

என்னோடு சுற்றியது

நிலவும் உன்

நினைவும்!

எங்கே சென்றாயடி?

கண்ணான கண்மணியே
காதலெல்லாம் போனதெங்கே?-தமிழ்ச்
சொல்லான அழகுப்பெண்ணே
சொல்லாமல் போனதெங்கே?

முத்தம் பெறும் ஆசையத்தான்
மொத்தமா வச்சிருந்தேன் -எனது
சித்தம் கலக்கிவிட்டு நீ
சிறகடித்து போனதெங்கே ?

எட்டு திசயிருக்கு நீ
போன திசை தெரியலயே -நிலவு
சுட்டுவிட்டு போனாலும்
பாவி மனம் மாறலையே !

சுத்தி வந்ததிரு நெஞ்சும் உன்
சித்தப்பன் தோப்புக்குள்ள -இன்று
பத்தி எரிவதொரு நெஞ்சம்
இதென்ன நீதி புள்ள ?

சீமை சரக்கடிச்சாலும் உண்
சிரிப்பு சத்தம் கேட்குதடி -இழவு
ஆமை போல சுமைகளைத்தான்
சுமக்கிறேன் என் மனசிலடி!

போனதெல்லாம் போகட்டும் நீ
நல்லாயிரு தாயி -எனக்கு
கடைசி ஆச ஒன்னுருக்கு
உம்புள்ளைக்கு எம் பேர வையீ !