Monday, October 26, 2009

முதல் முத்தம்


கால்களின் கீழ் பூமி நழுவ ,

மேகங்களுக்கிடையில்,

பூக்களின் வாசனை பூசி ,

காற்றோடு கலந்து

நீலக்கடல் மீது பறந்து ...



திரும்பி வந்து பார்த்த போது

முத்தம் முடிந்திருந்தது !

இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை

முதல் முத்தத்தை போலவே

உன்னையும் !