Thursday, November 26, 2009

காதலருவி


அருவியாய் விழும்
காதலுக்கு அணை
போட முடியாது !
வேண்டுமானால்
நனைந்து கொள்
!

பூவே


உன் தோழிகளோடு நீ!
பூக்களின் நடுவே
ஒரு தேவதை
பார்க்கிறேன் நான்!

பிரிய காதலி

<

Tuesday, November 10, 2009

சிரிப்பு


பிறந்த நாள் ,
இனிப்பெடுத்துக்கொள்
என்று சிரித்தாய் . . .
சிரிப்பெடுத்துக்கொண்டேன்!

Monday, November 9, 2009

தராமலே செல்கிறாய்!

பிறந்தநாளன்று,
உனக்கு சாக்லேட்
பிடிக்குமே என்று
நிறைய தந்தாய்,
உன்னையும் தான்
பிடிக்கும்,
தராமலே செல்கிறாய்!

பிறந்த நாள்


உன் பிறந்த நாள் என்று

காலையில் எழுந்து

தலை முழுகி

புத்தாடை யுடுத்தி

கோயில் சென்று தொழுது

எல்லோருக்கும் இனிப்புகளைப்

பகிர்ந்து பின்

உன்னைப்பார்க்க வருகையில்

.


.

.

.

அவனுக்கு கேக்
ஊட்டிகொண்டிருந்தாய் !