கண்ணான கண்மணியேகாதலெல்லாம் போனதெங்கே?-தமிழ்ச்
சொல்லான அழகுப்பெண்ணே
சொல்லாமல் போனதெங்கே?
முத்தம் பெறும் ஆசையத்தான்
மொத்தமா வச்சிருந்தேன் -எனது
சித்தம் கலக்கிவிட்டு நீ
சிறகடித்து போனதெங்கே ?
மொத்தமா வச்சிருந்தேன் -எனது
சித்தம் கலக்கிவிட்டு நீ
சிறகடித்து போனதெங்கே ?
எட்டு திசயிருக்கு நீ
போன திசை தெரியலயே -நிலவு
சுட்டுவிட்டு போனாலும்
பாவி மனம் மாறலையே !
சுத்தி வந்ததிரு நெஞ்சும் உன்
சித்தப்பன் தோப்புக்குள்ள -இன்று
பத்தி எரிவதொரு நெஞ்சம்
இதென்ன நீதி புள்ள ?
சீமை சரக்கடிச்சாலும் உண்
சிரிப்பு சத்தம் கேட்குதடி -இழவு
ஆமை போல சுமைகளைத்தான்
சுமக்கிறேன் என் மனசிலடி!
போனதெல்லாம் போகட்டும் நீ
நல்லாயிரு தாயி -எனக்கு
கடைசி ஆச ஒன்னுருக்கு
உம்புள்ளைக்கு எம் பேர வையீ !
2 comments:
ஆரம்பம் அருமை
தொடர்க.... வாழ்த்துக்கள்
நன்றி கண்ணன்
Post a Comment